நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது. நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. வாய்வுக்கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது. நமது வயிற்றில் உள்ள புண்கள் சரி செய்து நன்கு செரிமானம் ஆவதற்கு இட்லி பெரிதும் உதவுகிறது.
இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு இட்லி கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேரட் இட்லியாகவோ அல்லது பீட்ருட் இட்லியாகவோ கொடுக்கலாம். நீராவியில் வேக வைப்பதனால் கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவாக இட்லி உள்ளது. இட்லியில் நல்ல செல்கள் அதிகமாக உள்ளதால் 12 மணிநேரம் வரைக் கெடாமல் இருக்கும்.
மற்ற சிற்றுண்டிகளுக்கு உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் இட்லிக்கு ஒரு சிறப்புத்தகுதி உள்ளது. இட்லி நாள் என்று ஒன்று உள்ளது. 30-மார்ச் – உலக இட்லி நாள்
தமிழக பொருளாதாரத்தில் இட்லியின் பங்கு
சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டி விட்டது. அதில் 25 சதவிகிதம் மக்கள் அதாவது 25 லட்சம் மக்கள், காலை 4 இட்லி சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் 1 கோடி இட்லி தயார் செய்யப்படுகிறது. எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு. ஒரு இட்லி இரண்டு ருபாய் என்று விற்பதாக வைத்துக்கொண்டால் கூட, 2 கோடி ரூபாய் பணம், ஒவ்வொரு காலையிலும் புழங்குகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தில் இட்லி இன்றியமையாத பங்கு வகிக்கிறது.
இட்லி என்பது ஒரு சரிவிகித உணவு.
இட்லி உணவில் கொழுப்பு இல்லை நாள்தோறும் கிடைக்கவேண்டிய கொழுப்பு கிடைக்காது. அதனுடன் முட்டை/இறச்சி/நெய்/எண்ணெய் சாப்பிட்டால் கிடைக்கும். கய்கறிகள் சேர்த்து சாப்பிடும் போது விட்டமின்கள் கிடைக்கும்.
இட்லியில் உள்ள சத்துக்கள் :
60 – 70 கலோரிகள், 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியன உள்ளன.
தினமும் 4 இட்லி சாப்பிட்டால் 300 – 350 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடுவதனால் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.