பொதுவாக இட்லி மாவை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் சேமித்து வைக்கலாம். மூன்று நாட்களுக்கு மேலாக பிரிட்ஜில் வைத்த மாவை பயன்படுத்தும் போது அது அதிகமாக புளிக்க ஆரம்பிக்கலாம். இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். தோசை மொறு மொறுவென்று மிருதுவாக வருவதற்கு தோசை மாவின் காலக்கெடுவிற்குள் அதை பயன்படுத்த வேண்டும்.
மாவு ஆட்டிய பிறகு அந்த மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சிறிது இடைவெளி விட்டு பிரிட்ஜில் வைத்தால் அது கெடாமல் இருக்கும். மேலும் நாம் இட்லியோ தோசையோ சமைக்க ஆரம்பிக்கும் முன் அரை மணி நேரத்திற்கு முன்பு அந்த மாவை எடுத்து வெளியே வைத்து ரூம் டெம்பரேச்சருக்கு அதை கொண்டு வர வேண்டும். அதன் பிறகு நாம் இட்லியோ அல்லது தோசையோ ஊற்றிக் கொள்ளலாம்.
பொதுவாகவே இட்லி மற்றும் தோசை மாவு கெட்டுப் போகாமல் இருக்க சுத்தமான பாத்திரங்களையே நாம் கையாள வேண்டும். வீட்டு முறைப்படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 20 வருட காலமாக அண்ணாச்சி விலாஸ் இட்லி மாவு தயாரிக்கப்படுகிறது.