இட்லி அரிசி பற்றிய தகவல்கள்

Idly rice details
Eat Healthy Food

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (Rice research station) 1986 ம் வருடம் அறிமுகப்படுத்திய குறுகிய குண்டு நெல் ரகம் ASD-16.

நவரை,கார்,சொர்ணவாரி, குறுவை, பின் தாளடி பட்டங்களுக்கு ஏற்ற ராகம் .

ATD 31 (தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்,தமிழ்நாடு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ) மற்றும் CO 39 (கோயம்புத்தூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) இவ்விரு நெல் வகைகளின் கலப்பினம் ASD-16. தேவையும், விற்பனை வாய்ப்பும், ,கட்டுபடியாகும் விலையும் கிடைப்பதால் விவசாயிகளால் அதிகம் விரும்பப்படும் ரகம் .
வறட்சி தாங்கும் ரகம் . மற்ற நெல் ரகங்களை விட குறைவான அளவு தண்ணீர் போதும் . ஒரு ஏக்கருக்கு 72 கிலோ நெல் கொண்ட மூட்டை 33-38 வரை எதிர்பார்க்கலாம் .

அரிசி வெள்ளை நிற குறுகிய குண்டு ரகம். பால் ஒட்டு, ஒட்டுச் சண்டி ,குண்டு அரிசி இட்லி அரிசி என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு .
IR 20, CO 43 ,சிகப்பரிசி போன்ற சில அரிசி ராகங்கள் இட்லிக்காக உபயோகமானாலும் , பரவலாக பலராலும்.. இட்லிக்காக விரும்பப்படும் அரிசி ரகம் ASD16.

#idly#annachi#idlymaavu#idlylover#idlyrecipe#idlyspecial#varietiesofidly#howtomakeidlymaavu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Annachi vilas