நீங்கள் வாங்கும் தரமற்ற இட்லி மாவில் உள்ள அதிகப்படியான புளிப்பு உங்கள் வயிற்றை கெடுத்து உங்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் அது மட்டுமல்ல உங்களின் சேமிப்பை கரைத்து உங்கள் பொருளாதாரத்தை ஆட செய்துவிடும் என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.
இட்லி தோசை மாவை எட்டு மணி நேரத்திற்கு மேலாக புளிக்க வைக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் தொடர்ந்து இனப்பெருக்கமடையும் அதனால் மாவு புளித்து உப்பி விடும்.தேவைக்கு அதிகமாக மாவு புளிப்பதால் அதில் செய்யப்படும் பதார்த்தங்கள் வயிற்றில் செரிமான கோளாறுகளை உண்டு பண்ணும் .ஜீரணத்துக்கு தேவையான சுரப்பிகளையும் பாதிக்கும் குடலுக்குள் விரைவாக ஜீரணம் நடைபெறாமல் தேங்கும்போது அந்த உணவு விஷமாக மாறுகிறது. இந்த அஜீரணம் காலப்போக்கில் பல நோய்களுக்கு காரணியாகவும் அமைகிறது.
எனவே நீங்கள் இட்லி மாவு வாங்கும் போதும் வீட்டில் இருப்பு வைக்கும் போதும் மாவு தேவைக்கும் அதிகமாக புளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அண்ணாச்சி விலாஸ் இட்லி மாவு உங்கள் குடும்ப ஆரோக்கியத்தின் மீது அக்கறையுடன் ஆட்டப்பட்டது.