இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், ‘வடராதனே’ என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி குறித்து, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றப்படுவதாக சில குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer:
The content provided in this channel is for informational and entertainment purposes only. The recipes, cooking techniques, and nutritional information shared here are based on personal experiences, research, and our own understanding of culinary practices.
#annachi #idlymaavu #howtomakeidlymaavu #idlymaavu #annachivilas #idlyspecial